என் மனசில பட்டத உங்ககிட்ட பகிர்ந்துக்க போறேன்.... தப்பு இருந்தா சுட்டிக்காட்டுங்க, திருத்திகொள்கிறேன்.
சென்னை வீட்டு உரிமையாளர்களும் குடும்பகாட்டுப்பாடும்:
குடும்ப கட்டுப்பாட்டை அரசாங்கத்தை விட மிகமிக ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடிபவர்கள் வீட்டு உரிமையாளர்கள் தான் என்று தோன்றுகிறது. என் அலுவலக தோழிக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடன் அவர்கள் house owner செய்த முதல் காரியம் வீட்டை காலி பண்ண சொன்னது தான். Parents with one childகு தான் இடமாம். கொடுமடா சாமி!!!!
த ஹிந்து:
பத்திரிகையில் "ஸ்ரீலங்கன் டிராமா" என்று விக்கிரமாதித்தன் எழுதிய கட்டுரையை
படித்தேன். திடீரென்று இந்த பத்திரிகைக்கு ஈழ தமிழர் மீது வந்த பாசம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது. செல்லாது..............செல்லாது
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்துவதற்கு கொள்கை (?) அளவில மத்திய அரசாங்கம் சம்மதம் தெரிவிச்சிடாங்க. சந்திரசேகர ராவ்வும் தன்னோட உண்ணாவிரதத்த முடிச்சிடாறு. தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு 60 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவங்களோட பதவியில இருந்து விலகிடாங்களாம். எனக்கு இப்போ என்ன கவலைன்னா,
நம்ம ராமதாஸ் மாதிரி ஆளுங்க இங்க இப்படி எதுவும் ஆரம்பிச்சிட கூடாது.
Friday, December 11, 2009
நவீன கிருஷ்ணர்கள்
குர்பான் படத்தில் கரீனா கபூரின் நிர்வாண முதுகு போஸ் நம்ம கலாச்சார காவலர்களிடையே கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தாக்கரே கட்சியினர் கரீனாவுக்கு சேலை பரிசளித்துள்ளனர். மும்பையில் கரீனாவைப் போலில்லாமல் சேலை வாங்கவே காசின்றி வாழும் ஏழைகள் ஏராளமாக உள்ளனர். தாக்கரே கட்சியினரின் பார்வை அந்தப் பக்கம் திரும்பினால் எவ்வளவு நல்ல இருக்கும்.
Wednesday, December 9, 2009
அறிமுகம்
"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி" கதை தாங்க.....உங்க எல்லாருடைய பதிவுகளையும் படிக்கும்போது நாமும் எழுதலாமேன்னு ஆசை வரும். ஆனா ரொம்ப தயக்கமா இருக்கும். ஏன்னா எழுதுலகம் எனக்கு புதிது. சிறுவயதில் ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதை தவிர எனக்கும் எழுத்திற்கும் சம்பந்தமே கிடையாது. சரி முயற்சி செய்து பாப்போம், ரொம்ப எதிர்ப்பு இருந்தால் நிறுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். எனவே சிரமம் பார்க்காமல் எனது பதிவுகளை படித்து, நல்லா இருந்தா தட்டிகொடுத்து, தவறும் இடத்தில திருத்தி, எனக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
வணக்கம்.
வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)